
செய்திகள் மலேசியா
கோப்பெங் அருள்மிகு ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம்: தாலிக்கொடிகள் களவாடப்பட்டன
கோப்பெங்:
அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது. இருப்பினும் இந்நிகழ்வில் ஒரு கொடூரமான, அசிங்கமான சம்பவங்கள் நடந்தேறின.
இந்த கும்பாபிஷேகத்தில் அறுவரின் தாலி கொடிகள் களவாடப்பட்டன. இது மிகவும் ஒரு கேவலமான சம்பவம் என்று பேராக் மாநில இந்திய சமூக நலத்துறை, மனிதவளம், சுகாதாரம் ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தம் கண்டனத்தை தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, நேற்று காலையில் மஞ்சோங் சித்தியவான் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்டபோது நான்கு பெண்களின் தாலிக் கொடிகள் திருடப்பட்டன. இத்தகைய சம்பவங்கள் நமது இந்தியர்களின் மிக கேவலமான செயல்நடவடிக்கைகளை பிரதிபலிக்கின்றன என்று அவர் வருத்தமாக கூறினார்.
ஆகையால், இத்தகைய சம்பவங்கள் தவிர்க்கும் பொருட்டு இனிவரும் காலங்களில் மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளில் தங்கசங்கிலியை அணிவதை குறைத்துக்கொள்ளும்படி அவர் இந்திய பெண்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த தங்கதாலி மற்றும் தங்கசங்கிலியை அறுக்கும் செயல்நடவடிக்கை ஆண்களை தவிர்த்து பெண்களும் ஈடுபட்டிருக்கலாம் என்று நம்ப ப்படுகிறது. இந்த இரு இடத்திலும் ஒரு திருட்டு கும்பல் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
-ஆர். பாலசந்தர்