
செய்திகள் மலேசியா
கூட்டரசு, மாநில அரசாங்கங்கள் கூட்டாக இணைந்து சபா மாநில மேம்பாட்டிற்கு வழிவகுக்க வேண்டும்: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம்
கோத்தா கினாபாலு:
கூட்டரசு, மாநில அரசாங்கங்களின் கூட்டு ஒத்துழைப்பினால் வருங்காலத்தில் சபா மாநிலம் ஒரு மேம்பாடு அடைந்த மாநிலமாக அமையும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
கூட்டரசு, மாநில அரசாங்கங்கள் யாவும் இணைந்தால் சபா மாநிலம் சிறந்த வளர்ச்சியைப் பெற முடியும்
நாம் நமது நாட்டை பெருவாரியாக நேசித்தால், நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டே இருப்போம். அல்லாஹ்வுக்கு தான் நாம் நமது நன்றியினைத் தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் சொன்னார்.
நாட்டு மக்களின் வளப்பத்திற்கும் முன்னேற்றத்திற்கும் கூட்டரசு, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
-மவித்திரன்