நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மடானி அரசாங்கம் 144 திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தகவல் 

கோத்தா கினாபாலு: 

மடானி அரசாங்கம் தலைமையில் 144 மேம்பாட்டு திட்டங்கள் வெற்றிக்கரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

இத்திட்டங்கள் யாவும் 14 பில்லியன் ரிங்கிட்டை உட்படுத்தியதாகும் என்று அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

கோத்தா கினாபாலுவில் இருதய சிகிச்சை மையம் மேம்படுத்தப்பட்டது, தாவாவ் மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டது. 

சபா மாநிலத்தில் சொலார் மடானி திட்டத்திற்காக அரசாங்கம் 350 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளதாகவும் தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வார் குறிப்பிட்டார். 

நாட்டு மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதில் மடானி அரசாங்கம் உறுதியாக உள்ளதாக அவர் சொன்னார். 

முன்னதாக, சபா மாநிலத்தில் நடைபெற்ற PROGRAM TRANSFORMAS RAKYAT 2025 நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டிருந்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset