நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுமாத்ராவில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: மலேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை- மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் 

கோலாலம்பூர்: 

இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 

இந்தோனேசியா நாட்டு வட பகுதியில் உள்ள சுமத்ரா தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

உள்ளூர் நேரப்படி மாலை 4.57 மணிக்கு கடல் மட்டத்திலிருந்து 89 கிலோமீட்டர் தொலைவிலிருந்து நிலநடுக்கம் ஏற்பட்டது. 

நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மலேசியாவிற்கு எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. 

தீபகற்ப மலேசியாவின் மேற்கு கரை மாநிலங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக சொல்லப்படுகிறது. 

குறிப்பாக, பினாங்கு மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று மெட் மலேசியா தெரிவித்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset