நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எச்.ஆர்.டி கோர்ப் நிறுவனத்தின் மீது உள்ள  விசாரணைக்கான கண்டுப்பிடிப்புகளை எம்.ஏ.சி.சி வெளியிட்டது

கோலாலம்பூர்: 

எச்.ஆர்.டி கோர்ப் நிறுவனத்தின் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்ட விசாரணைக்கான கண்டுப்பிடிப்புகளை எம்.ஏ.சி.சி இன்று வெளியிட்டது. 

எச்.ஆர்.டி கோர்ப் மீது நடத்தப்பட்ட விசாரணைகள் என்பது அதன் செயல்திறன் மேம்பாடு செய்யவும் ஊழல் குறித்த அபாயத்தைக் குறைக்கவும் நோக்கமாக கொண்டது என்று எம்.ஏ.சி.சியின் துணை தலைமை ஆணையர் அஸ்மி கமாருசாமான் கூறினார். 

இந்நிலையில், தாங்கள் வழங்கிய சில ஆலோசனைகளை மனிதவள அமைச்சு, எச்.ஆர்.டி கோர்ப் நிறுவனங்கள் யாவும் நிறைவேற்றுவார்கள் என்று நாங்கள் நம்பிக்கை கொள்வதாக அவர் சொன்னார். 

எச்.ஆர்.டி கோர்ப் நிறுவனத்தின் மேம்பாட்டு செயல் திட்ட நடவடிக்கைகளை அமைச்சு தொடர்ந்து ஆதரிக்கும் என்று மனிதவள அமைச்சின் துணை தலைமை செயலாளர் சுதெக்னோ கூறினார். 

முன்னதாக, மனிதவள அமைச்சின் அலுவலகத்தில் எச்.ஆர்.டி.கோர்ப் மீதுள்ள விசாரணைக்கான கண்டுப்பிடிப்புகள் அடங்கிய அறிக்கையை எம்.ஏ.சி.சியின் இரண்டாவது துணை இயக்குநர் அஹ்மத் சுக்ரி தயிப் வழங்கினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset