
செய்திகள் மலேசியா
அதிகாரப்பூர்வப் பயணமாகப் பிரதமர் அன்வார் நாளை ரஷ்யா செல்கின்றார்
கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை தொடங்கி மே 16-ஆம் தேதி வரை ரஷ்யாவிற்கு மூன்று நாள்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் அழைப்பை ஏற்று பிரதமர் அன்வார் அங்குச் செல்ல திட்டமிட்டிருப்பதாக பிரதமரின் மூத்த செய்தித் தொடர்பாளர் துங்கு நஷ்ருல் அபைடா தெரிவித்தார்.
மே 13 முதல் 15 வரை மாஸ்கோ, பின்னர் டாடர்ஸ்தானின் கசானுக்கும் அவர் செல்லவுள்ளார்.
மாஸ்கோவில் இருக்கும்போது, அவர் மாஸ்கோ மாநில சர்வதேச உறவுகள் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவார். நிறுவனத்தில்
அதன் பின் ரஷ்ய தொழிலதிபர்களுடன் சந்திப்புகளை நடத்துவார். மற்றும்
மாஸ்கோவில் உள்ள மலேசிய புலம்பெயர்ந்தோருடன் சந்திப்புகளை நடத்துவார் துங்கு நஷ்ருல் அபைடா குறிப்பிட்டார்.
- அஸ்வினி செந்தாமரை