
செய்திகள் மலேசியா
அடுத்த தலைமுறையை உருவாக்குவதில் அன்னையர்கள் முதுங்கெலும்பாக விளங்குகின்றனர்: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அன்னையர் தின வாழ்த்து
கோலாலம்பூர்:
ஒவ்வொரு குடும்பத்தின் இராணியாக மட்டும் அன்னையர்கள் இல்லாமல் அடுத்த தலைமுறையை உருவாக்குவதில் அன்னையர்கள் முதுங்கெலும்பாக விளங்குகின்றனர் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது அன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டார்.
கல்வி அறிவு நிறைந்த, தலைமைத்துவ பண்புமிக்க தலைமுறையை உருவாக்க அன்னையர்கள் முதன்மை பங்கு ஆற்றுகின்றனர்.
மடானி அரசாங்கம் சார்பாக நாட்டிலுள்ள அனைத்து அன்னையர்களுக்கும் தமது அன்னையர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
அன்பு, இரக்கம், பக்தி ஆகியவை ஓர் அன்னை குடும்பத்திற்கு வழங்குவதால் ஒரு மகிழ்ச்சியான, ஒற்றுமையான குடும்பம் உருவாகிறது என்று அன்வார் சொன்னார்.
-மவித்திரன்