நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை: 313 பேர் விசாரிக்கப்பட்டனர் 

சிங்கப்பூர்: 

சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை நடத்திய அதிரடிச் சோதனையைத் தொடர்ந்து 313 பேர் வெவ்வேறு குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டனர். 

15 வயதுக்கும் 80 வயதுக்கும் இடைப்பட்ட மொத்தம் 213 ஆண்களும் 100 பெண்களும் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது. 

காவல்துறையினர் சோதனை நடவடிக்கை ஏப்ரல் 18ஆம் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது. 

சந்தேக நபர்கள் 1,200க்கும் அதிகமான மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் 11.9 மில்லியன் வெள்ளிக்கு மேல் பறிகொடுத்ததாகக் கூறப்படுகிறது. சந்தேக நபர்கள் மீதான விசாரணை தொடர்கிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset