நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கத்தோலிக்க சமூகத்தினரின் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார்

வாட்டிகன் சிட்டி: 

கத்தோலிக்கச் சமூகத்தினரின் புதிய போப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த பேராயர் ராபர்ட் பிரான்சிஸ் பிரவொஸ்ட் (Robert Francis Prevost) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

போப் லியோ (Leo) என்று அழைக்கப்படும் அவருக்கு வயது 69.
கத்தோலிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் போப்பாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Sistine Chapel தேவாலயத்தின் புகைப்போக்கிலிருந்து வெண்புகை தென்பட்ட சுமார் 70 நிமிடங்கள் கழித்து St. Peter's Basilica தேவாலயத்தின் மாடி முகப்பில் போப் லியோ தோற்றமளித்தார்.

அவரைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையில் பேராயர் பதவியில் உள்ள 133 பாதிரியார்கள் கலந்துகொண்டனர்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset