
செய்திகள் மலேசியா
விலை கட்டுப்பாடு, இலாப எதிர்ப்புச் சட்டம் அனைவருக்கும் பொருந்தும்: அர்மிசான்
கோலாலம்பூர்:
விலை கட்டுப்பாடு, இலாப எதிர்ப்புச் சட்டம் (AKHAP) 2011 அனைவருக்கும் பொருந்தும் வகையில் இயற்றப்பட்டிருப்பதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவீன அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹம்மத் அலி தெரிவித்தார்.
அனைத்து வணிகத் துறையும் இந்தச் சட்டத்திற்கு உட்பட்டுச் செயல்பட வேண்டும்.
யாருக்கும் இந்தச் சட்டத்திலிருந்து விலக்களிக்கப்படவில்லை என்று அவர் உறுதியளித்தார்.
இந்தச் சட்டம் சில குறிப்பிட்ட பிரிவுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று எதுவும் கூறவில்லை என்று வலியுறுத்தினார்.
எனவே, AKHAP 2011 அனைத்து துறைகளுக்கும் பொருந்தும் என்றும் யாருக்கும் சாதகமாக இயற்றப்படவில்லை என்றும் அவர் உறுதியளித்தார்.
பொருட்களுக்குச் சட்டத்தின் பிரிவு 10, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்திற்கு விலை நிர்ணய விதிமுறைகளை அமைக்க அதிகாரம் அளிக்கிறது என்று அவர் கூறினார்.
மே 1-ஆம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் மருந்துகளின் விலைகளைக் காட்சிப்படுத்த வேண்டும் என்ற விதிமுறைக்கு வழிவகை செய்யும் தனியார் சுகாதார வசதிகள் & சேவைகள் சட்டத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற மலேசிய மருத்துவ சங்கத்தின் (MMA) கோரிக்கை குறித்து அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 8, 2025, 2:14 pm
68 வயது மூதாட்டி UITM பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் பட்டத்தைப் பெற்றார்
May 8, 2025, 2:10 pm
உள்துறை அமைச்சின் இரு அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்தது
May 8, 2025, 1:28 pm
பாகிஸ்தான், இந்தியா பதற்றம்: அமிர்தசரஸ் விமான பயணங்களை ஏர்ஏசியா நிறுத்தியது
May 8, 2025, 12:34 pm