நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாகிஸ்தான், இந்தியா பதற்றம்: அமிர்தசரஸ் விமான பயணங்களை ஏர்ஏசியா நிறுத்தியது

சிப்பாங்:

ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜீ அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவின் அமிர்தசரஸுக்குச் செல்லும் விமானங்களை ஏர் ஆசியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.

மே 9 வரை இடைநிறுத்தம் இன்று தொடங்கியதாக ஏர் ஆசியா குரூப் பெர்ஹாட் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஏர் ஆசியா நிலைமையைக் கண்காணித்து வருகிறது. மேலும் எங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதில் உறுதியாக இருக்கிறோம்.

விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளையும் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம்.

அமிர்தசரஸுக்குச் செல்லும், அங்கிருந்து வரும் பயணிகள், இடைநிறுத்தம் குறித்த அறிவிப்புகளுக்கு தங்கள் மின்னஞ்சல்கள், கைத்தொலைபேசியை சரிபார்க்க ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset