நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

13ஆவது மலேசிய திட்டத்தில் பலமான கல்வி உருமாற்றத்தை உருவாக்க வேண்டும்: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கருத்து

கோலாலம்பூர்: 

மலேசியாவின் கல்வி உருமாற்றத்தில் பலமான, மறுசீரமைப்பு கொண்ட கல்வி கொள்கை அவசியமாகிறது. இதுவே 13ஆவது மலேசிய திட்டத்தின் முதல்கட்ட திட்டமாகும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

நடப்பில் உள்ள கொள்கைகள் யாவும் மறு மதிப்பீடு செய்யப்பட்டு 13ஆவது மலேசியா திட்டத்தை முன்னெடுக்கும் பல்வேறு நிலைத்தன்மைமிக்க கல்வி செயல்திறன் அவசியம் என்று அன்வார் இப்ராஹிம் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டார். 

நாட்டின் கல்விக்கான புதிய வியூகத்தை வகுக்க வேண்டும் என்ற கோணத்தில் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாரிடம் வலியுறுத்தியிருந்தார். 

தேசிய கல்வி கொள்கையில் உருமாற்றத்தை கொண்டு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் அன்வார் கேட்டுக்கொண்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset