
செய்திகள் மலேசியா
தேசிய முன்னணி - பக்காத்தான் ஹராப்பான் இடையிலான தொகுதி பங்கீடு குறித்து முடிவெடுக்க இன்னும் நேரமுள்ளது: ஜாஹித் ஹமிடி
கோலாலம்பூர்:
சபா மாநிலத் தேர்தலுக்கான தேசிய முன்னணி - பக்காத்தான் ஹராப்பான் இடையிலான தொகுதி பங்கீடு குறித்து முடிவெடுக்க இன்னும் நேரமுள்ளது என்று துணைப் பிரதமர் ஜாஹித் ஹமிடி கூறினார்.
தொகுதி பங்கீடு குறித்து வரும் நாட்களில் தெளிவான பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும் என்று தேசிய முன்னணியின் தலைவருமான ஜாஹித் இவ்வாறு குறிப்பிட்டார்.
தற்போது, தொகுதி பங்கீடு குறித்து விவாதிப்பது சரியான நடவடிக்கையல்ல என்றார் அவர்.
தொகுதி பங்கீடு மற்றும் போட்டியிடவுள்ள சட்டமன்றத் தொகுதிகள் குறித்து ஆலோசனை கூட்டத்தின் முடிவு செய்யப்படும் என்று கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் மலேசியா சர்வதேச உரிமைக் கண்காட்சி (FIM) தொடக்க விழா மற்றும் ஆசியான் உரிமைக் கூட்டமைப்பு (AFC) 2025 பிரகடனத்திற்குப் பிறகு அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்வாண்டு நடைபெறவுள்ள சபா மாநிலத் தேர்தலில் 73 தொகுதிகளில் தேசிய முன்னணி 40 தொகுதிகளில் போட்டியிடுவதைச் சபா மாநில அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் சுஹைமி நஸ்ரினின் அறிக்கை குறித்து ஜாஹித் கருத்துரைத்தார்.
இதற்கு பக்காதான் ஹராப்பான் கட்சி ஒப்புதல் அளித்ததாகவும் அவர் கூறினார்.
மீதமுள்ள 33 தொகுதிகளில் பக்காதான் ஹராப்பான் போட்டியிடும் என்றார் அவர்.
இருப்பினும், இது குறித்து விவாதிக்க பக்காதான் ஹராப்பான் இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தேசிய முன்னணியைச் சந்திக்கவில்லை என்று சபா மாநில பிகேஆர் கட்சி தெரிவித்தது.
சுஹைமி 40 தொகுதிகல் என்ற எண்ணிக்கையை எங்கிருந்து பெற்றார் என்பது எங்களுக்குத் தெரியாது.
மேலும் அவர் யாருடன் அதைப் பற்றி விவாதித்தார் என்பதும் எங்களுக்குத் தெரியாது என்று சபா மாநிலத் தகவல் பிரிவுத் தலைவர் ரசீஃப் ரஹிமின் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 8, 2025, 2:14 pm
68 வயது மூதாட்டி UITM பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் பட்டத்தைப் பெற்றார்
May 8, 2025, 2:10 pm
உள்துறை அமைச்சின் இரு அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்தது
May 8, 2025, 1:28 pm
பாகிஸ்தான், இந்தியா பதற்றம்: அமிர்தசரஸ் விமான பயணங்களை ஏர்ஏசியா நிறுத்தியது
May 8, 2025, 12:34 pm