நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உள்துறை அமைச்சின் இரு அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்தது 

புத்ராஜெயா: 

குடியுரிமை அங்கீகார விண்ணப்பத்தை விரைவுப்படுத்த லஞ்ச வாங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய உள்துறை அமைச்சின் இரு அதிகாரிகளும் ஆடவர் ஒருவரும்  மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டனர். 

நேற்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரையில் புத்ராஜெயாவில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது. 

எம்.ஏ.சிசியால் முன்னெடுக்கப்பட்ட OP OUTLANDER சோதனை நடவடிக்கையின் தொடர்ச்சியால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இரு அதிகாரிகள் விசாரணைகாக கைது செய்யப்பட்ட விவகாரத்தில் எம்.ஏ.சி.சியின் விசாரணைக்கு உள்துறை அமைச்சு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று உள்துறை அமைச்சு தெரிவித்தது. 

அடுத்த கட்ட விசாரணைக்காக கைது செய்யப்பட்ட மூவரும் புத்ராஜெயாவில் உள்ள எம்.ஏ.சி.சி அலுவலகத்தில் வாக்குமூலம் வழங்குகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset