நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

SST விரிவாக்கம் ஒத்திவைப்பு: மலேசியா மாற்று வழிகளை கண்டறிய வேண்டும்: டத்தோஶ்ரீ முஹம்மத் இக்பால் கருத்து 

கோலாலம்பூர்: 

நாட்டில் SST எனப்படும் விற்பனை, சேவை வரி திட்டத்தை விரிவாக்கம் செய்ய அரசாங்கம் ஒத்திவைத்துள்ள நிலையில் மலேசியா அதன் மாற்று வழிகளை கண்டறிய வேண்டும். 

இலக்கிடப்பட்ட உதவி, கட்டங்கட்டமான முன்னெடுப்புகள், அமலாக்க நடவடிக்கைகளை அதிகரித்தல், இலக்கவியல் லெவி அல்லது புதுப்பிக்கப்பட்ட பசுமை திட்டம் போன்ற மாற்று வழிகளை மலேசியா ஆலோசிக்கலாம் என்று கோலாலம்பூர் பொருளாதார கிளப்பின் தலைவர் டத்தோஶ்ரீ முஹம்மத் இக்பால் ராவுத்தார் கூறினார். 

மாற்று வழி என்று கூறப்படும் வழியானது தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அதுவே நாட்டின்  பொருளாதார மீட்டெடுக்கும் பலமிக்க நடவடிக்கையாக கருதப்படுவதாக அவர் தெரிவித்தார். 

பெருந்தொற்றுக்குப் பிந்தைய சூழல், உலகளாவிய நெருக்கடி காரணமாக குடும்பம் மற்றும் வர்த்தகதில் பலர் இன்னும் நிலையில்லாமல் இருக்கின்றனர். அரசாங்கத்தின் ஒத்திவைப்பு நடவடிக்கையானது உடனடி உதவிக்கு முன்னுரிமை அளிப்பதாக இருக்கிறது. 

SST திட்டமும் அதிலிருந்து கிடைக்கும் வருவாய் என்பது நாட்டிற்குப் பெரும் உறுதுணையாகும். இதுவே நாட்டு மக்கள் SST வரி விதிப்பின் மீது நம்பிக்கை கொள்ள வழிவகுக்கும்.  

SST வரி விதிப்பு ஒத்திவைப்பானது அடிப்படை பொருளாதாரத்தின் கட்டமைப்பினை மறுமதிப்பீடு செய்ய ஏதுவாக இருக்கும்,  மறுமதிப்பீடு செய்த பின் அரசாங்கம் SST வரி விதிப்பை விரிவாக்க செய்யலாம் என்று அவர் கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset