
செய்திகள் மலேசியா
கட்டுப்பாட்டை இழந்த லோரி 5 வாகனங்கள் மீது மோதியது: தாய், குழந்தை படுகாயம்
சுங்கைபூலோ:
கட்டுப்பாட்டை இழந்த லோரி 5 வாகனங்களை மோதிய சம்பவத்தில் தாய், குழந்தை படுகாயமடந்தனர்.
இந்த சம்பவம் நேற்று இங்குள்ள கெத்ரி நெடுஞ்சாலை புக்கிட் சுபாங் சமிஞ்சை விளக்கு சந்திப்பில் நிகழ்ந்தது.
மதியம் 1 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
29 வயது பெண் ஒருவர் தனது நான்கு வயது மகளை குழந்தை இருக்கையில் ஏற்றிக்கொண்டு ஓட்டிச் சென்ற புரோட்டான் சாகா கார் உட்பட நான்கு வாகனங்கள் மீது லோரி மோதியது.
விபத்து குறித்த புகார் மதியம் 1.20 மணிக்கு போலிஸ் துறைக்கு தகவல் கிடைத்தது.
வீடியோ காட்சிகள் மூலம் நடத்தப்பட்ட ஆரம்ப விசாரணையில்,
சைபர்ஜெயா நோக்கிச் சென்ற லோரி கட்டுப்பாட்டை இழந்து புரோட்டான் சாகா கார் மீது மோதியது. அதில் இரண்டு பேர் காயமடைந்தனர்.
மேலும் அடுத்த பாதையில் நான்கு வாகனங்கள் மோதியதாகவும் நம்பப்படுகிறது என்று சுங்கை பூலோ போலிஸ் தலைவர் முகமட் ஹபீஸ் முஹம்மத் நோர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 8, 2025, 2:14 pm
68 வயது மூதாட்டி UITM பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் பட்டத்தைப் பெற்றார்
May 8, 2025, 2:10 pm
உள்துறை அமைச்சின் இரு அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்தது
May 8, 2025, 1:28 pm