நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு: டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால் தலைமையில் மலேசிய பேராளர்கள் திருச்சி புறப்பட்டனர்

சிப்பாங்:

உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் கலந்து கொள்ள டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால் தலைமையில் மலேசிய பேராளர்கள் திருச்சி புறப்பட்டனர்.

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு இணைப்பே இலக்கியம் எனும் கருப்பொருளில் வரும் மே 9,10,11ஆம் தேதிகளில் திருச்சியில் நடைபெறவுள்ளது.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இம் மாநாட்டை தொடக்கி வைத்து பேருரையாற்றவுள்ளார். 

தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றவுள்ளார்.

உலகின் பல நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.

குறிப்பாக மலேசியாவில் இருந்து செல்லும் பேராளர்களுக்கு மலேசிய இஸ்லாமிய கல்வி வாரியத்தின் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால் தலைமையேற்றுள்ளார்.

இந்நிலையில் டத்தோஸ்ரீ இக்பால் தலைமையிலான 52 பேர் கொண்ட மலேசிய பேராளர் குழுவினர் இன்று திருச்சிக்கு புறப்பட்டனர்.

கிம்மா, ஈமான் கட்சிகள், பெர்மிம் பேரவை, மிம்கோய்ன், பிரிம், மலாக்கா முஸ்லீம் லீக், கெபிமா, எம்எம்ஒய்சி, அமானா, மாவார், பிரஸ்மா  உட்பல பல இயக்கங்களில் இருந்து பிரதிநிதிகள் இப்பேராளர்கள் குழுவில் இணைந்துள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset