நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

68 வயது மூதாட்டி UITM பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் பட்டத்தைப் பெற்றார் 

ஷா ஆலாம்: 

68 வயது மூதாட்டி UITM பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் பட்டத்தைப் பெற்றார். 

14 பேரப்பிள்ளைகளுக்கு பாட்டியாக இருக்கும் டாக்டர் கமலியா மாட் சமான் முனைவர் பட்டப்படிப்பை பகுதிநேரமாக மேற்கொண்டார். 

கடந்த ஏழு ஆண்டுகளாக UITM பல்கலைக்கழகத்தின் மருந்தக புலத்தில் விரிவுரையாளராக பணியாற்றிக்கொண்டே முனைவர் படிப்பை மேற்கொண்டார். 

நிறைய விரிவுரையாளர்கள் முதுகலை, முனைவர் பட்டங்களைக் கொண்டுள்ளனர். தானும் முனைவர் பட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற வேட்கையோடு முனைவர் பட்டப்படிப்பை மேற்கொண்டு வெற்றியும் கண்டதாக அவர் சொன்னார். 

நல்வாய்ப்பாக ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு முனைவர் பட்டத்தைப் பெற்றதாக அவர் மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset