நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அதிகம் நிலச்சரிவு ஏற்படக் கூடிய 20 இடங்களுக்கான தடுப்பு & பழுது பார்க்கும் பணிகளுக்கு 36 மில்லியன் தேவை: அலெக்சாண்டர் நந்தா

கோலாலம்பூர்: 

நாட்டில் அதிகம் நிலச்சரிவு ஏற்படக் கூடிய 20 இடங்களைப் பொதுப்பணித் துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளதாக அதன் அமைச்சர் Datuk Seri Alexander Nanta Linggi தெரிவித்தார். 

இந்த இடங்களில் உடனடி நிலச்சரிவு தடுப்பு பணிகள் மேற்கொள்ள 36 மில்லியன் ரிங்கிட் செலவாகும் என்று அவர் குறிப்பிட்டார். 

பழுது பார்க்கும் பணிகளுக்கான தொகை அதிகமாக இருந்தாலும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக Alexander Nanta Linggi இன்று நடைபெற்ற தேசிய நிலச்சரிவு விழிப்புணர்வு மாநாட்டின் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். 

கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில்தான் அதிகம் நிலச்சரிவு ஏற்படுவதற்கான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

ஒட்டுமொத்தமாக,  நிலச்சரிவு ஏற்படக் கூடிய 2,000 இடங்கள் உள்ளன. அதில் 20 மட்டுமே அதிக ஆபத்துள்ளவை என வகைப்படுத்தப்பட்டு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset