
செய்திகள் மலேசியா
ஜின் பிங்கின் வருகைக்கு முன்னதாக ஃபாலுன் காங் இயக்கத்தைச் சேர்ந்த 70 பேர் கைது
கோலாலம்பூர்:
சீன அதிபர் ஜின் பிங்கின் மலேசிய வருகைக்கு முன்னதாக ஃபாலுன் காங் இயக்கத்தைச் சேர்ந்த 70 பேரை போலிசார் கைது செய்தனர்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரின் எதிர்ப்பாளர்களை மௌனமாக்கும் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மாதம் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வருகைக்கு முன்னதாக, கோலாலம்பூரில் ஃபாலுன் காங் இயக்கத்தைச் சேர்ந்த அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜின் பிங் மலேசியாவை விட்டு வெளியேறிய பின்னரே விடுவிக்கப்பட்ட பல கைதிகள், ஏப்ரல் 13 அன்று செராஸில் உள்ள ஒரு கடையில் நடந்த குழுவின் கூட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது சாதாரண உடையில் இருந்த போலிசாரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஷி ஜின்பிங் மலேசியாவிற்கு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த சோதனை நடந்தது.
போலிசார் தாங்களை தடுத்து வைக்கப்பட்டதற்கு மூன்று சாத்தியமான காரணங்களை வழங்கியதாக 45 வயதான மாக்ஸ் சுவா கூறினார்.
அவை சட்டவிரோத சங்கம், குடியேற்ற மீறல்கள், அச்சு, வெளியீட்டு அச்சகச் சட்டம் ஆகிய காரணங்கள் கூறப்பட்டது என்றார்.
- பார்த்திபன் நாகராஜன்