
செய்திகள் மலேசியா
நாட்டில் இனப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளது: துன் மகாதீர்
கோலாலம்பூர்:
நாட்டில் இனப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளது என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கூறினார்.
நாட்டில் இன இடைவெளி அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.
நான் பதவியில் இருந்த காலத்தைவிட இப்போது இன உணர்வுகள் அதிகமாக வெளிப்படுகிறது.
மக்கள் இப்போது தங்கள் இனத்தைப் பற்றி அதிகம் அறிந்திருக்கிறார்கள். மேலும் பிற சமூகங்களால் அச்சுறுத்தப்படுவதாக உணர்கிறார்கள்,
இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற அண்டை நாடுகளில் ஒன்றிணைக்கும் தேசிய மொழியைப் பயன்படுத்துவதாலும், இன அடிப்படையிலான அரசியல் கட்சிகள் இல்லாததாலும் இதுபோன்ற பதட்டங்கள் ஏற்படுவதில்லை.
அரசியல் கட்சிகள் இனத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு, அந்தந்த மொழிகள், கலாச்சாரங்களை மேம்படுத்தினால், நாம் இன அடிப்படையில் பிரிக்கப்படுவோம்.
அரசியல்வாதிகள் பெரும்பாலும் ஆதரவைப் பெற இனப் பிரச்சினைகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், இதனால் நாட்டிற்குள் பிளவுகள் மோசமடைகின்றன.
இருப்பினும், மலாய் கட்சிகள் இன அடிப்படையிலானவையாகப் பார்க்கப்படக்கூடாது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்