
செய்திகள் மலேசியா
பிகேஆர் துணைத்தலைவராக நூருல் இசா அன்வார் வருவதற்கு நெகிரி செம்பிலான் பிகேஆர் தொகுதிகள் ஆதரவு
சிரம்பான்:
பிகேஆர் கட்சியின் துணைத்தலைவராக நூருல் இசா அன்வார் வருவதற்கு நெகிரி செம்பிலான் பிகேஆர் கட்சி தொகுதிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
பிகேஆர் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு நூருல் இசா அன்வாரின் பங்களிப்பு அளப்பரியதாகும். பிகேஆர் கட்சியின் துணைத்தலைவர் ஆக வருவதில் தாங்கள் முழு ஆதரவு வழங்குவதாக அவர்கள் கூட்டாக அறிவித்தனர்.
தலைமைத்துவ பண்பு நிறைந்த நூருல் இசா கட்சியின் வெற்றிக்குப் பெரும் பாடுபடுவார் என்றும் அரசியலில் அனுபவம் நிறைந்த அவர் துணைத்தலைவராக வருவதில் எந்த சிக்கலும் இல்லை என்று அவர்கள் கூட்டாக தெரிவித்தனர்.
2025-2028 பிகேஆர் கட்சியின் தேசிய துணைத்தலைவர் வேட்பாளராக நூருல் இசா அன்வார் போட்டியிட பிகேஆர் கட்சி தொகுதிகள் தங்களின் பெருவாரியான ஆதரவுகளை வழங்கியுள்ளனர்.
-மவித்திரன்