செய்திகள் உலகம்
உலகளாவிய வணிகப் பிரிவில் கூகுள் 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது
கோலாலம்பூர்:
விற்பனை மற்றும் வர்த்தக ஒத்துழைப்புகளுக்குப் பொறுப்பு வகிக்கும் வணிகப் பிரிவில் வேலை செய்யும் 200 ஊழியர்களைப் கூகுள் பணிநீக்கம் செய்துள்ளது.
பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தரவு மையங்களில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு இருப்பதால் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வாடிக்கையாளர்களுக்கு விரைவாகவும் சிறப்பாகவும் சேவையாற்றுவதற்கும் கூட்டுத் தொழில் திட்டங்களுக்கு வழிவகுப்பதற்கும் மாற்றங்கள் செய்துவருவதாய் கூகுள் கூறியது.
கடந்த மாதம் மென்பொருள், கருவி தயாரிப்புப் பிரிவுகளிலிருக்கும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை Google ஆட்குறைப்புச் செய்ததாக The Information செய்தி நிறுவனம் குறிபிட்டது.
ஜனவரி 2023-ஆம் ஆண்டில் Google நிறுவனத்தைச் சொந்தமாகக் கொண்டிருக்கும் Alphabet நிறுவனம், உலகளவில் அதன் ஊழியர் எண்ணிக்கையை 6 விழுக்காடு குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியது.
கடந்த ஆண்டு நிலவரப்படி அதன் ஊழியர் எண்ணிக்கை சுமார் 183,000ஆக உள்ளது என ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டது.
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியில் அதிக செலவிடும் காரணத்தால் Meta, Microsoft, Amazon, Apple போன்ற நிறுவனங்கள் மற்ற செலவுகளைக் குறைக்க முயன்றுவருவதாகக் கூறப்படுகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 12, 2026, 10:43 pm
தாய்லாந்து-கம்போடிய எல்லையில் 8.4 கிலோமீட்டர் நீளமான சுவரை அமைக்கும் தாய்லாந்து
September 11, 2026, 9:51 pm
நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதல்: 25 ஆண்டுகள் நிறைவு
September 11, 2026, 7:21 am
சரக்கு கப்பலில் தீ: 25 பேர் கருகி பலி
September 10, 2026, 11:36 am
வங்கதேசத்தில் தீவிரம் காட்டும் தட்டம்மை: 999 போ் உயிரிழப்பு
September 10, 2026, 9:14 am
இஸ்லாமியச் சமயக் கல்விக்கு செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தலாமா?
September 10, 2026, 8:26 am
உலகிலேயே அதிக சம்பளம் பெறும் சிங்கப்பூர் பிரதமர்
September 10, 2026, 8:00 am
