நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியா-பாகிஸ்தான் தாக்குதல்: அம்ரித்சார் செல்லும் மலேசிய ஏர்லைன்ஸ், பாத்தேக் ஏர் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

பெட்டாலிங் ஜெயா: 

இந்தியா -பாகிஸ்தான் இடையிலான தாக்குதலை முன்னிட்டு இந்தியாவின் அம்ரித்சார் செல்லும் மலேசிய ஏர்லைன்ஸ், பாத்தேக் ஏர் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மே 7-ஆம் தேதி முதல் மே 9-ஆம் தேதி வரை  அம்ரித்சார் விமான நிலையம் மூடப்பட்டதைத் தொடர்ந்து தேசிய விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.  

பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் அண்மைய நிலைமையைத் தற்போது கண்காணித்து வருவதாகவும் மலேசியா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பாகிஸ்தானின் லாகூர் மற்றும் இந்தியாவின் அமிர்தசரஸுக்குச் இருவழி பயணம் மேற்கொள்ளும் விமானச் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக பாதேக் ஏர் அறிவித்துள்ளது.

மே 7, 8-ஆம் தேதிகளில் கோலாலம்பூர் - லாஹூர், கோலாலம்பூர் - அம்ரித்சார் இடையிலான விமானச் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக பாதேக் ஏர் அறிவித்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset