நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தனியார் சுகாதார வசதிகள் மற்றும் சேவைகள் சட்டம் 1998 மறுஆய்வு செய்யப்படும்: ஃபஹ்மி ஃபாட்சில்

புத்ரா ஜெயா: 

தனியார் சுகாதார வசதிகள் மற்றும் சேவைகள் சட்டம் 1998 மறுஆய்வு செய்யப்படும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார். 

தனியார் மருத்துவமனையில் மருத்துவச் சேவைகளுக்கு விதிக்கப்படும் கட்டணங்கள் இந்தச் சட்டத்திற்கு உட்பட்டது.

இதற்காக முறையான ஆவணங்களைத் தற்போது சுகாதார அமைச்சகம் தயார் செய்து வருவதாக அதன் டத்தோஸ்ரீ டாக்டர்  ஜுல்கிஃப்லி அஹமத் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்ததாக ஃபஹ்மி குறிப்பிட்டார்.

மேலும், தனியார் மருத்துவமனைகளில் மருத்துவச் சேவைகளுக்கான கட்டணங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் ஏழாவது அட்டவணை மதிப்பாய்வு செய்யப்படும்.

இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த விவகாரம் அமைச்சரவையின் பார்வைக்குக் கொண்டு வரப்படும். 

அதன் பின் ஒரு முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் அமைச்சரவை கூட்டத்திற்கு பின் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தின் கீழ் வரும் விலைக் கட்டுப்பாடு மற்றும் இலாப எதிர்ப்புச் சட்டத்தைப் பிரதமர் மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் ஃபஹ்மி தெரிவித்தார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset