
செய்திகள் மலேசியா
ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது இயங்கலை வழி கற்பித்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: ஃபஹ்மி ஃபாட்சில்
கோலாலம்பூர்:
தலைநகரில் இம்மாதம் நடைபெறவுள்ள ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை இயங்கலை வழியும் வேலையை வீட்டிலிருந்தபடி மேற்கொள்ளவும் அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது சில முக்கியச் சாலைகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இந்த நடவடிக்கை முன்னெடுப்பட்டதாக ஃபஹ்மி விளக்கமளித்தார்.
முக்கியச் சாலைகளில் அமைந்துள்ள பள்ளிகள் மாநாடு நடைபெறும் காலக்கட்டத்தில் இயங்கலை வழி கற்பித்தல் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் மட்டுமல்லாமல், அப்பகுதியில் வேலை செய்யும் பொது, தனியார் நிறுவன ஊழியர்களும் வீட்டிலிருந்து வேலை செய்ய அரசாங்கம் ஊக்குவித்துள்ளது.
இயங்கலை வழி கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொள்ளும் பள்ளிகளின் பட்டியலை கல்வி அமைச்சகம் விரைவில் வெளியிடும் என்றார் அவர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 8, 2025, 2:14 pm
68 வயது மூதாட்டி UITM பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் பட்டத்தைப் பெற்றார்
May 8, 2025, 2:10 pm
உள்துறை அமைச்சின் இரு அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்தது
May 8, 2025, 1:28 pm
பாகிஸ்தான், இந்தியா பதற்றம்: அமிர்தசரஸ் விமான பயணங்களை ஏர்ஏசியா நிறுத்தியது
May 8, 2025, 12:34 pm