நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தங்கும் விடுதியில் மாணவரை மானபங்கம் செய்த ஆசிரியர் மீது குற்றச்சாட்டு 

பெட்டாலிங் ஜெயா: 

11 வயது பள்ளி மாணவர் ஒருவரை தங்கும் விடுதியில் மானபங்கம் செய்த விவகாரம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டினார். 

இருப்பினும், தனக்கு எதிரான குற்றத்தை நீதிபதி ஹசீலியா முஹம்மத் முன் மறுத்து விசாரணையைக் கோரினார். 

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 28,29ஆம் தேதிகளில் போர்டிக்சனில் உள்ள தங்கும் விடுதியில் ஆண் மாணவருக்கு எதிராக பாலியல் செயலில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. 

2017ஆம் ஆண்டு சிறார்கள் பாலியல் குற்றங்கள் சட்டத்தின் செக்‌ஷன் 14(ஏ) இன் கீழ் ஆசிரியர் குற்றஞ்சாட்டப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் மேற்போகாத சிறை தண்டனை விதிக்கப்படலாம் .

குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் பிணை தொகையுடன் கூடிய ஜாமின் வழங்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset