நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெஅடிலான் உறவுமுறையை கடைப்பிடிக்கிறதா?; ஒருபோதும் இல்லை: ஃபஹ்மி

புத்ராஜெயா:

கெஅடிலான் கட்சியில் ஒருபோதும் உறவு முறையை கடைப்பிடித்தது இல்லை.

கெஅடிலான் தகவல் பிரிவுத் தலைவர் ஃபஹ்மி ஃபட்ஸில் இதனை கூறினார்.

துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட நூருல் இசா அன்வருக்கு அதிகரித்து வரும் அழுத்தம் காரணமாக, கட்சி குடும்பச் சலுகைகளைப் பின்பற்றுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

கெஅடிலான் தலைவரும் பிரதமருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் மகள் நூருல் இஸ்ஸா, கட்சியின் துணைத் தலைவராகவும் இருப்பதால், உறவினர்களுக்கு சலுகை காட்டும் பிரச்சினை எழவில்லை.

ஒருபோதும் இல்லை. நூருல் இஸ்ஸா உதவித் தலைவர். அவர் இப்போது அந்தப் பதவியை வகிக்கிறார்.

எனவே அது போன்ற பிரச்சினைகள் எழுவதில்லை என்று அவர் இன்று மாலை புத்ராஜெயாவில் தனது வாராந்திர செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

நூருல் இசா இறுதியில் கட்சியின் இரண்டாவது இடத்திற்கு போட்டியிடத் தேர்வு செய்தால்,

கெஅடிலான் உறவினர்களுக்குச் சலுகை அளிப்பதாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலளிக்குமாறு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset