
செய்திகள் மலேசியா
அமெரிக்க வரி பிரச்சினையை கையாள்வதில் அரசாங்கம் கவனமாகவும், விவேகமாகவும் அணுகுமுறையை எடுக்கிறது: பிரதமர்
புத்ராஜெயா:
அமெரிக்கா விதித்துள்ள வரி கட்டணப் பிரச்சினையைக் கையாள்வதில் அரசாங்கம் கவனமாகவும் விவேகமாகவும் அணுகுமுறையை எடுத்து வருகிறது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
இராஜதந்திர பேச்சுவார்த்தைகள், பிராந்திய ஒத்துழைப்புக்கு முன்னுரிமை அளித்து இந்த விஷயம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதும், தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதும் முக்கிய நோக்கத்துடன், இந்த அணுகுமுறை அமைதியாகவும் சமநிலையுடனும் செயல்படுத்தப்படுகிறது.
மடானியின் பொருளாதார சாதனைகளைப் பற்றிப் பகிர்ந்து கொண்டார். இந்த சாதனைகள் 2024 ஆம் ஆண்டில் 5.1 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் தொடர்ந்து வலுவாக உள்ளது.
குறிப்பாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று அவர் கூறினார்.
அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளும் 378.5 பில்லியன் ரிங்கிட் மிக அதிகமாக இருந்தன.
அதே நேரத்தில் பணவீக்க விகிதம் 1.8 சதவீதமாகவும், வேலையின்மை 3.1 சதவீதமாகவும் 10 ஆண்டுகளில் மிகக் குறைவாகப் பதிவாகியுள்ளன என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 8, 2025, 2:14 pm
68 வயது மூதாட்டி UITM பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் பட்டத்தைப் பெற்றார்
May 8, 2025, 2:10 pm
உள்துறை அமைச்சின் இரு அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்தது
May 8, 2025, 1:28 pm
பாகிஸ்தான், இந்தியா பதற்றம்: அமிர்தசரஸ் விமான பயணங்களை ஏர்ஏசியா நிறுத்தியது
May 8, 2025, 12:34 pm