நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெஅடிலான் துணைத் தலைவர் பதவிக்கு நூருல் இஷா போட்டியிட முழு ஆதரவு: குணராஜ் 

செந்தோசா:

கெஅடிலான் துணைத் தலைவர் பதவிக்கு நூருல் இஷா போட்டியிட வேண்டும்.

அவருக்கு கோத்தாராஜா தொகுதி கெஅடிலான் முழு ஆதரவு தரும் என்று அதன் தலைவர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

முழு பொறுப்புணர்வு, போராட்ட மனப்பான்மையுடன் கெஅசிலான்  துணைத் தலைவர் வேட்பாளராக நூருல் இசா அன்வருக்கு எனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.

நூருல் இசா சீர்திருத்தத்தின் இளவரசி என்று மட்டும் அறியப்படவில்லை,

மாறாக சீர்திருத்த இயக்கத்தின் தொடக்கத்திலிருந்து மக்களின் குரலை எழுப்புவதில் ஒரு துணிச்சலான, கொள்கை ரீதியான,  நிலையான தலைவராக தன்னை நிரூபித்துள்ளார்.

சமூக நீதி, ஜனநாயகம்,  மனித உரிமைகளுக்காகப் போராடுவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகள் இளைய தலைமுறையினருக்கு,

குறிப்பாக கண்ணியமான அரசியலில் தீவிரமாக ஈடுபட விரும்பும் பெண்களுக்கு உத்வேகம் அளித்துள்ளன.

அவரது தலைமைத்துவம் நாடாளுமன்ற உறுப்பினரர், சீர்திருத்த ஆர்வலர் உட்பட அனுபவங்கள் நிறைந்தது.

மக்களின் பல்வேறு பிரச்சினைகளைக் கையாள்வதில் எப்போதும் வெளிப்படைத்தன்மை, அக்கறை, ஞானத்தையும் வெளிப்படுத்துகிறது.

இந்த சவாலான அரசியல் சகாப்தத்தில் கட்சியின் போராட்டத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தவும் பல்வேறு அடுக்கு உறுப்பினர்களின் பலங்களை ஒன்றிணைக்கவும், மக்களுக்கு ஒரு புதிய, பொருத்தமான கதையை கொண்டு செல்லவும் கூடிய ஒரு துணைத் தலைவர் கெஅடிலானுக்கு தேவை.

மேலும் கெஅடிலான் மகளிர் பிரிவு நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் 30% பெண் பிரதிநிதித்துவத்திற்கான உறுதிப்பாட்டிற்கு இணங்க,

கட்சியின் உயர்மட்டத் தலைமைத்துவத்தில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கான விருப்பத்திற்கும் இந்த ஆதரவு ஒத்துப்போகிறது என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான குணராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset