
செய்திகள் மலேசியா
ஜாலான் மஸ்ஜித் இந்தியா தேவிஶ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரத்தில் காணப்பட்ட சுமூகமான தீர்வுக்கு ஆலய நிர்வாகமே காரணம்: ஓம்ஸ் தியாகராஜன்
கோலாலம்பூர்:
ஜாலான் மஸ்ஜித் இந்தியா தேவிஶ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரத்தில் காணப்பட்ட சுமூகமான தீர்வுக்கு ஆலய நிர்வாகமே காரணம்.
ஓம்ஸ் குழுமத்தின் தலைவர் ஓம்ஸ் தியாகராஜன் இதனை கூறினார்.
தலைநகரில் புகழ் பெற்ற இவ்வாலயத்தின் வருடாந்திர திருவிழா வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இத்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் சிறப்பு பூஜையின் நான் கலந்து கொண்டேன்.
குறிப்பாக என்னுடன் எனது மனைவியின் பிறந்த நாளை ஆலய நிர்வாகத்தினர் கொண்டாடின. இவ்வேளையில் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் இவ்வாலயம் எதிர்கொண்ட பிரச்சினை நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இருந்தாலும் தலைவர் பார்த்திபன் தலைமையிலான ஆலய நிர்வாகம் எடுத்த முடிவு தான் இப்பிரச்சினைக்கு சுமூகமான தீர்வை வழங்கியது.
மேலும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பல தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி.
குறிப்பாக ஆலயப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை காணும் மடானி அரசுக்கு நன்றி என்று ஓம்ஸ் தியாகராஜன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 8, 2025, 2:14 pm
68 வயது மூதாட்டி UITM பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் பட்டத்தைப் பெற்றார்
May 8, 2025, 2:10 pm
உள்துறை அமைச்சின் இரு அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்தது
May 8, 2025, 1:28 pm
பாகிஸ்தான், இந்தியா பதற்றம்: அமிர்தசரஸ் விமான பயணங்களை ஏர்ஏசியா நிறுத்தியது
May 8, 2025, 12:34 pm