நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோவிட் -19 தொற்று தொடர்பான போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு எதிரான வழக்கில் அரசு தரப்பு மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது

கோலாலம்பூர்:

கடந்த  2021 ஆம் ஆண்டு கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக மெழுகுவர்த்தி ஏந்தி நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களை கீழ் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து அரசு தரப்பு தனது மேல்முறையீட்டை வாபஸ் பெற்றுள்ளது.

சிலாங்கூர் ஜசெக மகளிர் பிரிவின் செயலாளர் நளினா நாயரின் கூற்றுப்படி,

2023 ஆம் ஆண்டு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முதல்நிலை வழக்கு நிறுவப்படவில்லை என்று தீர்ப்பளித்ததை அடுத்து, அரசு தரப்பு இன்று தனது மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது.

2021 ஆம் ஆண்டில் பேரணியின் போது கைது செய்யப்பட்டதற்காக நளினா,  சுஜாத்ரா ஜெயராஜ் மீது 1967 ஆம் ஆண்டு காவல் சட்டத்தின் பிரிவு 90 இன் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

தண்டனை நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 500 ரிங்கிட்டுக்கு மிகாமல் அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இந்நிலையில்  மேல்முறையீட்டைக் கைவிடுவதற்கான அரசுத் தரப்பு  தங்கள் மீதான கைதுகளும் குற்றச்சாட்டுகளும் நியாயமற்றவை மற்றும் அரசியல் ரீதியாக நோக்கம் கொண்டவை" என்ற நம்பிக்கையை இந்த முடிவு உறுதிப்படுத்தியது

அமைதியான துக்கம் அனுசரிப்பது குற்றமல்ல என்று நளினா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset