நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

"CuraLin advanced glucose support" துணை உணவைச் சாப்பிட வேண்டாம்: சிங்கப்பூர் அறிவியல் ஆணையம் 

சிங்கப்பூர்:

"CuraLin advanced glucose support" எனும் துணை உணவைப் பொது மக்கள் உண்ண வேண்டாம் என்று சிங்கப்பூர் அறிவியல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுவதாகக் கூறி விற்கப்பட்ட அதில் குறிப்பிடப்படாத மூலப்பொருள்கள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

"CuraLin advanced glucose support" மூலிகைகளால் தயாரிக்கப்பட்டதல்ல. மாறாக, "glibenclamide", "metformin" ஆகிய மூலப்பொருள்கள் இருப்பது தெரிய வந்தது.

மருத்துவரின் ஆலோசனையின்றி அந்த மூலப்பொருள்கள் அடங்கிய மருந்துகளை உண்ணக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

மருத்துவ ஆலோசனையின்றி உட்கொண்டால் ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு மிக மோசமாகக் குறைந்து வலிப்பு, சுயநினைவு இழப்பது ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset