நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஹாங்காங்கில் நூற்றாண்டு பெருமை வாய்ந்த பன்(bun) திருவிழா களைகட்டியது 

ஹாங்காங்:

ஹாங்காங்கில் நூற்றாண்டு பெருமை வாய்ந்த பன் (bun) 
திருவிழாவைக் கொண்டாடப் பெருமளவில் மக்கள் திரண்டனர்.

ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் விழாவில் “bun-scrambling” என்பது முக்கிய அங்கம்.

பிளாஸ்டிக் பன்கள் அடுக்கப்பட்டுள்ள கோபுரத்தில் ஏறி அவற்றைச் சேகரிக்க வேண்டும். ஒவ்வொர் அடுக்குகளில் உள்ள பன்களுக்கும் மதிப்பெண்கள் உண்டு. ஆக அதிகமான பன்களையும் மதிப்பெண்களையும் பெறுபவர் வெற்றிபெறுவார்.

1978இல் பன் கோபுரம் சரிந்து பலர் காயமடைந்தனர். அதனால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருவிழா 2005ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கியது.

அமைதி, பாதுகாப்பு ஆகிய அம்சங்களை மையமாக வைத்துத் திருவிழா நடத்தப்படுகிறது.

ஆதாரம்: AP

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset