நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஸ்காட்லாந்தில் உலகின் பழமையான கால்பந்து மைதானம் கண்டுபிடிப்பு

அன்வோத்:

உலகில் இதுவரை அறியப்படாத பழமையான கால்பந்து மைதானம் ஸ்காட்லாந்தின் Anwoth, Kirkcudbrightshire பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த முக்கியமான வரலாற்று தகவலை விளையாட்டு வரலாற்றாளர் Ged O’Brien வெளியிட்டுள்ளார்.

தனது ஆராய்ச்சியில், 17-ஆம் நூற்றாண்டில் உள்ள ஒரு பண்ணை பகுதியில் கால்பந்து விளையாடப்பட்டு வந்ததற்கான ஆதாரமாக, Rev. Samuel Rutherford எழுதிய குறிப்புகளையும் அவர் இணைத்துள்ளார். 

அவர் 1627–1638ம் ஆண்டு காலப்பகுதியில் பொது மக்கள் அந்த மைதானத்தில் விளையாடி இருக்கலாம் என்பதையும்  Ged O’Brien  தனது கண்டுப்பிடிப்பில் குறிப்பிட்டுள்ளார். 

இது முற்றிலும் ஒரு கட்டமைக்கப்பட்ட மைதானம்," என்று O’Brien கூறினார்.

இதன் மூலம், உலகின் பழமையான கால்பந்து மைதானம் ஸ்காட்லாந்தில் இருந்தது என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது கால்பந்து வரலாற்றை மாற்றக்கூடிய ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது.

இது மட்டும் இல்லாமல், ஸ்காட்லாந்தின் Stirling Castle அருகே, 1540-களில் செய்யப்பட்ட உலகின் பழமையான கால்பந்து பந்தும் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset