நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததுடன் 46 பேர் காயமடைந்தனர்:  பாகிஸ்தான் அறிவிப்பு

முசாஃபராபாத்:

பாகிஸ்தானில் ஒன்பது இடங்களில் இந்தியத் தாக்குதல்களில் 26 பேர் கொல்லப்பட்டதுடன்  46 பேர் காயமடைந்தனர்.

அதே நேரத்தில் இந்தியாவின் பஞ்சாப் பகுதியில் பாகிஸ்தானின் பதிலடித் தாக்குதல்களில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்.

தாக்குதலைத் தொடங்கிய ஐந்து இந்திய இராணுவ விமானங்களை பாகிஸ்தான் இராணுவம் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியதாகவும் இஸ்லாமாபாத் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலை வெளிப்படையான போர் என்று பாகிஸ்தான் வர்ணித்தது.

இது இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அணு ஆயுத நாடுகளுக்கு இடையே நடந்த மிக மோசமான சண்டையாகும்.

காஷ்மீரில் கடந்த மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட போராளிகள் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று இந்தியா குற்றம் சாட்டியது.

ஆனால் இஸ்லாமாபாத் இதில் ஈடுபடுவதை மறுத்தது.

இந்த பிரச்சாரத்திற்கு ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிட்ட இந்தியா, பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்பு என்று கூறி, இந்தியா மீதான தாக்குதல்கள் திட்டமிடப்பட்டிருந்த ஒன்பது இடங்களைத் தாக்கியதாகக் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset