நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

புதிய போப்பிற்கான முதல் வாக்களிப்பில் பெரும்பான்மை எட்டப்படவில்லை 

வத்திகன்:

புதிய போப்பிற்கான முதல் வாக்களிப்பில் பெரும்பான்மை எட்டப்படவில்லை என்று வத்திகன் தெரிவித்தது. 

புதிய போப்பைத் தெரிவு செய்யும் வாக்களிப்பின் முடிவில் Sistine Chapel தேவாலயக் கூரையின் புகை  புகைபோக்கியிலிருந்து கரும்புகை வெளியேறியது வாக்களிப்பில் பெரும்பான்மை எட்டப்படவில்லை என்பதைக் குறிக்கின்றது. 

வெண்புகை வந்தால் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்று பொருள்படும்.

தேவாலயக் கூரையின் புகைபோக்கியைக் கவனிக்கப் பல்லாயிரக்கணக்கானோர் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருக்கின்றனர்.

133 பேராயர்கள் தனிமையில் சந்தித்துச் சுமார் 3 மணி நேரத்திற்குப் பிறகு கரும்புகை வெளியிடப்பட்டது.

உள்ளூர் நேரப்படி மீண்டும் அவர்கள் இன்று பின்னேரத்தில் சந்திக்கவிருக்கின்றனர்.

புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்குக் குறைந்தது 89 வாக்குகள் தேவை.

சுமார் 70 நாடுகளைச் சேர்ந்த பேராயர்கள் இதற்காகக் கூடியுள்ளனர்.

சென்ற மாதம் 21ஆம் தேதி போப் பிரான்சிஸ் காலமானார்.

அதனைத் தொடர்ந்து புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான புனித வழிபாடுகள் நேற்று தொடங்கின.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset