நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மூன்றாவது தவணைக்காக அதிபர் போட்டியில் களமிறங்கமாட்டேன்: டொனால்டு டிரம்ப் திட்டவட்டம் 

வாஷிங்டன்: 

அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் இன்னொரு அதவாது மூன்றாவது தவணைக்கு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடபோவதில்லை என்று திட்டவட்டமாக கூறினார். 

இதனால் மூன்றாவது தவணையாக தான் அதிபராக முயற்சிகளை மேற்கொள்வதாக வெளிவந்த வதந்திகளுக்கு டிரம்ப் முற்றுப்புள்ளி வைத்தார். 

எட்டு ஆண்டுகள் அமெரிக்கா அதிபர், இரு தவணைக்கான அதிபர் நான் என்று NBC தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் டிரம்ப் இவ்வாறு குறிப்பிட்டார். 

குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப், 2016 முதல் 2020ஆம் ஆண்டு வரை முதன்முறையாக அமெரிக்கா அதிபராக பணியாற்றினார். பிறகு 2020இல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வி கண்டார். 

பிறகு 2024 அமெரிக்கா அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் இம்முறை வெற்றிப்பெற்றார். ஜனவரி 20ஆம் தேதி 2025 முதல் அவர் அமெரிக்கா அதிபராக செயல்பட்டு வருகிறார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset