நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியிக்கு அரசு தடை விதிப்பு 

டாக்கா: 

வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு அரசியல் புரட்சி, மாணவர் போராட்டம் பெரிய அளவில் வெடித்தது. 

வங்காளதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா அந்நாட்டை விட்டு தப்பியோடி தற்போது முஹம்மத் யூனுஸ் தலைமையிலான புதிய அரசு ஒன்று பொறுப்பேற்றுள்ளது. 

இதையடுத்து, ஷேக் ஹசீனா கட்சியான அவாமி கட்சியின் மாணவர் அமைப்புக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வங்காளதேச அரசு தடை விதித்துள்ளது.

பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக அவாமி கட்சியின் மாணவர் அமைப்பான வங்காளதேச ஷஸ்ரா லீகிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவாமி கட்சிக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அக்கட்சி பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாக நடப்பு அரசு குற்றஞ்சாட்டியது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset