நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஆயிரம் ஆண்டுகளாக நீட்டிக்கும் காஷ்மீர் பிரச்சனைக்குத் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார்: டொனால்டு டிரம்ப் அறிவிப்பு 

வாஷிங்டன்: 

ஆயிரம் ஆண்டுகளாக நீடிக்கும் காஷ்மீர் பிரச்சனைக்கு மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்ற தயாராக உள்ளது. 

இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டிருப்பது தொடர்பில் முடிவை எடுக்க அமெரிக்கா உதவியதை எண்ணி தாம் பெருமை கொள்வதாகவும் அதிபர் டொனால்டு டிரம்ப் சொன்னார். 

முன்னதாக, ஆபரேஷன் சிந்தூர் இந்திய இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட பிறகு இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset