
செய்திகள் உலகம்
இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்த ஒப்புதல்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்:
இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நிகழ்ந்து வரும் சூழலில் போரை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியா உடனான போரை நிறுத்துவதாக பாகிஸ்தான் நாட்டின் துணை பிரதமர் இஷாக் தர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இரு நாடுகளும் போரை நிறுத்த முன்வந்திருப்பது பாராட்டுக்குரிய விஷயமாகும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்
கடந்த செவ்வாய்கிழமை நிகழ்ந்த SINDOOR OPERATIONஐ தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே கடுமையான போர் நிகழ்ந்து வந்தது.
பாகிஸ்தான் ஏவுகணைகளை இந்திய இராணுவம் வெற்றிக்கரமாக முறியடித்திருந்தது. இந்திய இராணுவமும் பாகிஸ்தான் தரப்பிற்கு எதிராக பதிலடி தாக்குதல் நடத்தியிருந்தனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 2:00 pm
சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை: 313 பேர் விசாரிக்கப்பட்டனர்
May 9, 2025, 10:00 am
கத்தோலிக்க சமூகத்தினரின் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார்
May 8, 2025, 11:09 am
புதிய போப்பிற்கான முதல் வாக்களிப்பில் பெரும்பான்மை எட்டப்படவில்லை
May 8, 2025, 10:28 am
உலகளாவிய வணிகப் பிரிவில் கூகுள் 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது
May 7, 2025, 5:33 pm
ஸ்காட்லாந்தில் உலகின் பழமையான கால்பந்து மைதானம் கண்டுபிடிப்பு
May 7, 2025, 3:50 pm