நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஆஸ்திரேலியாவில் இன்று மே 3ஆம் தேதி பொதுத்தேர்தல்: தொழிலாளர் கட்சிக்கும் கூட்டணி கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி 

மெல்பெர்ன்: 

ஆஸ்திரேலியாவில் இன்று மே 3ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆஸ்திரேலிய நாட்டு மக்கள் தங்களின் புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கவுள்ளனர். 

அந்நாட்டின் தொழிலாளர் கட்சி பெரும்பாண்மை வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்து கணிப்புகள் வெளிவந்துள்ளன. 

ஆஸ்திரேலியாவில் 76 நாடாளுமன்ற இடங்களை வென்றால் அடுத்த கூட்டரசு அரசாங்கத்தை அமைக்கலாம். 

நடப்பு அரசியல் சூழலில் தொங்கு நாடாளுமன்றம் ஏற்படலாம் என்றும் சொல்லப்படுகிறது 

தொழிலாளர் கட்சியின் தலைவர் அந்தோனி அல்பானிஸ், கூட்டணி கட்சி தலைவர் பீட்டர் டுட்டன் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. 

ஆஸ்திரேலியா பொதுத்தேர்தலை முன்னிட்டு கடந்த ஐந்து வாரங்களாக தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset