நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீபாவளி கொண்டாட்டம்: முகக்கவசம், சமூக இடைவெளியின்றி சாலை நடனம்; போலீசார் விசாரணை

கோலாலம்பூர்:

தீபாவளிக் கொண்டாட்டத்தின் போது பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதியில் நடனமாடிய சிலர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ஒரு குழுவாக நடனமாடிய ஆடவர்கள் முகக்கவசம் அணியாமலும், தனிநபர் - சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காததுமே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பான ஒரு டிக்-டாக் காணொலிப் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மொத்தம் 36 விநாடிகள் மட்டுமே உள்ள அந்தக் காணொலிப்பதிவில் குழுவாக உள்ள ஆடவர்கள் பட்டாசுகள் வெடிக்க, அதற்கு மத்தியில் டிரம்ஸ் இசைக்கேற்ப சாலையின் நடுவே நடனமாடுவதைக் காண முடிகிறது.

கடந்த 3ஆம் தேதி இரவு சுமார் 11 முதல் 12.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்திருப்பதாகக் கருதப்படுகிறது.

காணொலிப் பதிவின் அடிப்படையில் கொவிட்-19க்கான SOPக்கள் மீறப்பட்டுள்ளதாக பிரிக்ஃபீல்ட்ஸ் காவல்துறை துணைத் தலைவர் பஸ்ரி சகோனி Basri Sagoni தெரிவித்தார்.

"SOPக்கள் தொடர்பான எந்தவொரு விதிமீறல்களையும் நாங்கள் தீவிரமானதாகக் கருதி, விசாரணை மேற்கொள்கிறோம். இக் குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் அறிந்தவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில் தாமே முன்வருமாறு வலியுறுத்துகிறோம். அதேவேளையில் பொது ஒழுங்குக்கு குந்தகம் ஏற்படும் விதமாக, அக்குறிப்பிட்ட காணொலிப் பதிவு குறித்து யாரும் எத்தகைய யூகங்களும் செய்ய வேண்டாம்," என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset