நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கு தண்ணீமலை ஆலயத்திற்கு செல்ல கேபள் கார் அல்லது மின் படிக்கட்டுகள் நிர்மாணிக்க மாநில அரசு உதவ வேண்டும்: டத்தோ தினகரன்

சுங்கை நிபோங்:

பினாங்கு தண்ணீமலை ஆலயத்திற்கு செல்ல கேபள் கார் அல்லது மின் மடிக்கட்டுகள் நிர்மாணிக்க மாநில அரசு உதவ வேண்டும்.

பினாங்கு மாநில மஇகா தலைவர் டத்தோ ஜே. தினகரன் இக் கோரிக்கையை முன்வைத்தார்.

பினாங்கு மாநிலத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஆலயமாக தண்ணீர்மலை தண்டாயுதபாணி முருகன் ஆலயம் விளங்குகிறது.

இவ் வாலயத்திற்கு செல்ல கேபள் கார் அல்லது மின் படிக்கட்டுகளை நிர்மாணிக்க இந்து அறப்பணி வாரியம் இலக்காக கொண்டுள்ளது.

இத் திட்டத்திற்கு மாநில அரசு முழு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும்.

இந்த ஆதரவு கிடைத்தால் மஇகாவும் அதன் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரனும் முழு ஒத்துழைப்பை வழங்குவார்கள்.

பினாங்கு மாநில ரீதியிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் பேசிய டத்தோ தினகரன் இதனை கூறினார்.

இந்நிகழ்வில் மாநில முதல்வர் சாவ் கோன் இயூ,மாநில தேசிய முன்னணி தலைவர் மூசா ஷேக் பாட்சிர், ஜசெக தலைவர் லிம் குவான் எங், மஇகா உதவித் தலைவர் டத்தோ அசோகன், தலைமை செயலாளர் டத்தோ ஆனந்தன் உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset