செய்திகள் மலேசியா
கே.எல்.ஐ.ஏ விமான நிலையத்தில் கைகலப்பு: காவல்துறை விசாரணை
கோலாலம்பூர்:
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய ஊழியருக்கும் பயணி ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக கே.எல்.ஐ.ஏ காவல்துறை தலைவர் அஸ்மான் ஷாரிஆட் கூறினார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பு தொடர்பான காணொலி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து காவல்துறையினர் இந்த சம்பவத்தை உறுதி செய்தனர்.
சிறு காயங்களுக்கு இலக்கான பாதிக்கப்பட்ட விமான நிலைய ஊழியர் அதே நாளில் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்ததாக அவர் சொன்னார்.
கருத்து வேறுபாடு காரணமாக இந்த கைகலப்பு சம்பவம் ஏற்பட்டிருக்கிறது என்று அவர் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.
வேண்டுமென்ற காயம் விளைவித்தல் குற்றத்தை வகைப்படுத்தும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 323 இன் கீழ் இந்த சம்பவம் விசாரணை செய்யப்படுகிறது.
இந்நிலையில், கைகலப்பு தொடர்பான காணொலிகளைப் பொதுமக்கள் யாரும் பகிர வேண்டாம் என்று காவல்துறையினர் கேட்டுகொண்டனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 17, 2024, 2:16 pm
மாபெரும் தமிழ்த் தொண்டரான டத்தோ சாகுல் ஹமீதை இழந்துவிட்டேன்: தான்ஸ்ரீ குமரன்
November 17, 2024, 1:45 pm
பிரதமரின் பிரேசில் பயணம் 65 ஆண்டு கால இராஜதந்திர உறவுகள், வர்த்தகத்தை வலுப்படுத்துகிறது: ஹசான்
November 17, 2024, 1:35 pm
சொல்வயல் மலேசியத் தமிழ்க் கல்வியில் புதிய மைல்கல்
November 17, 2024, 1:21 pm
சபா மாநில ஊழல் விவகாரம் தொடர்பான செய்தியை நீக்க எம்.சி.எம்.சி உத்தரவு
November 17, 2024, 1:19 pm
அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டியில் ரினி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மாபெரும் சாதனை
November 17, 2024, 11:54 am
ஜி 20 கூட்டமைப்பில் கலந்து கொள்ள பிரதமர் அன்வார் இப்ராஹிம் பிரேசில் சென்றடைந்தார்
November 17, 2024, 9:56 am
கணவன்- மனைவி சாலை விபத்தில் பலி: போதையில் இருந்த கார் ஓட்டுநர் கைது
November 17, 2024, 9:27 am