செய்திகள் மலேசியா
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகள் வீட்டிலிருந்து கல்வி கற்கும் முறையைச் செயல்படுத்த வேண்டும்: ஃபட்லினா தகவல்
கோலாலம்பூர்:
வடகிழக்கு பருவமழையைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அல்லது தற்காலிக குடியேற்ற மையமாக (PPS) மாற்றப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வீட்டிலிருந்தப்படி கற்றல் கற்பித்தல் நடவடிக்கையைச் செயல்படுத்த கல்வி அமைச்சகம் இணக்கம் கொண்டுள்ளதாக அதன் அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
பள்ளிகளில் ஏற்படும் வெள்ளப் பிரச்சனைகளைக் கையாள்வதில் அனைத்து ஆசிரியர்களும் பயிற்சி பெற்றுள்ளனர் என்று அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்.
பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதாகவும், அனைவருக்கும் சாதகமான சூழலில் கற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
பள்ளிகள் பாதுகாப்பாகவும், இந்தக் குழந்தைகளின் கல்வியைத் தொடர ஏதுவாகவும் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்.
வெள்ள செயல்முறை அல்லது காலம் இன்னும் நீண்டதாக இருப்பதால் பள்ளி வழக்கம் போல் கல்வியைத் தொடர முடியாவிட்டால் வீட்டிலிருந்தப்படி கற்றல் கற்பித்தல் நடவடிக்கை செயல்படுத்தப்படும்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 16, 2024, 6:33 pm
அரசியலை தொடர்ந்து பொருளாதார ரீதியிலும் வலுவான கட்சியாக மஇகா உருவெடுக்கும்: டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்
November 16, 2024, 11:43 am