செய்திகள் மலேசியா
பகாங் மாநில இந்து ஆலய, அமைப்பு நிர்வாகங்களுடன் சந்திப்பு நவம்பர் 23, 24ஆம் தேதிகளில் நடைபெறும்: டத்தோ சிவக்குமார்
கோலாலம்பூர்:
பகாங் மாநில இந்து ஆலய, அமைப்பு நிர்வாகங்களுடன் சந்திப்புக் கூட்டம் வரும் நவம்பர் 23, 24ஆம் தேதிகளில் நடைபெறும்.
மஹிமாவின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.
மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலய, அமைப்புகளின் பேரவையின் தலைவராக நான் தேர்வு செய்யப்பட்டேன்.
நாடு முழுவதும் உள்ள ஆலயம், அமைப்புகளின் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சங்கத்தை வலுபடுத்துவதுதான் அதன் தலைவர் என்ற முறையில் எனது முதன்மை நோக்கமாக உள்ளது.
இதன் அடிப்படையில் முதல் கட்டமாக பகாங் மாநில இந்து ஆலயம், சங்கங்களுடன் சந்திப்புக் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.
நவம்பர் 23ஆம் தேதி மாலை 4 மணிக்கு பெந்தோங் சாமாங் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், இரவு 7 மணிக்கு காராக் ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் ஆகியவற்றில் இக்கூட்டம் நடைபெறும்.
மறுநாள் நவம்பர் 24ஆம் தேதி காலை 9.30 மணிக்கு குவாந்தான் ஶ்ரீ மாரியம்மன் ஆலயம், மாலை 3 மணிக்கு பெந்தகாப் தமிழ்ப்பள்ளி ஆகியவற்றில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அருகில் உள்ள ஆலயங்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள் திரளாக வந்து இக்கூட்டத்தில் கலந்து உரிய ஆலோசனைகளை வழங்கலாம் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.
இக்கூட்டங்கள் குறித்த மேல்விவரங்களுக்கு மகேஷை (0179175071) தொடர்பு கொள்ளலாம்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2024, 6:33 pm
அரசியலை தொடர்ந்து பொருளாதார ரீதியிலும் வலுவான கட்சியாக மஇகா உருவெடுக்கும்: டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்
November 16, 2024, 11:43 am