செய்திகள் மலேசியா
அரசியலை தொடர்ந்து பொருளாதார ரீதியிலும் வலுவான கட்சியாக மஇகா உருவெடுக்கும்: டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பர்:
அரசியலை தொடர்ந்து பொருளாதார ரீதியிலும் வலுவான கட்சியாக மஇகா உருவெடுக்கும்.
மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் இதனை கூறினார்.
நாட்டில் இந்திய சமுதாயத்திற்கு என குரல் கொடுக்கும் ஒரே கட்சியாக மஇகா மட்டுமே விளங்குகிறது.
இக் கட்சிக்கு ஒரு சில பின்னடைவுகள் ஏற்பட்டாலும் தற்போது அதில் இருந்து மீண்டு அரசியல் ரீதியில் வலுவாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து மஇகா மூன்று கட்டடங்களை கொண்டு பிரம்மாண்ட தலைமையகத்தை கட்டவுள்ளது.
இக்கட்டடம் கட்டி முடிக்கப்பட்டால் ஆண்டும் தோறும் கட்சிக்கு நிரந்தரமான வருமானம் கிடைக்கும்.
இந்த வரும் கட்சியை வலுப்படுத்த முடியும். அதே வேளையில் இந்திய சமுதாயத்திற்கும் உரிய உதவிகளை வழங்க முடியும்.
குறிப்பாக யார் ஆட்சிக்கு வந்தாலும் மஇகா யாரையும் நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது தான் மஇகாவின் பலம் என்று மஇகா பத்து தொகுதி மஇகாவின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புக்கு தலைமையேற்ற டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
மஇகாவின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ சரவணன், கூட்டரசு பிரதேச மஇகா தொடர்புக் குழுத் தலைவர் டத்தோ ராஜா சைமன், பத்து தொகுதி தலைவர் பாலகுமாரன் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2024, 11:43 am