நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உறுப்பினர்களை பொருளாதார ரீதியில் உயர்த்த கேகேபி கூட்டுறவு நிறுவனம் ஐந்தாண்டு திட்டத்தை கொண்டுள்ளது: தங்கராஜ்

கோலாலம்பூர்:

உறுப்பினர்களை பொருளாதார ரீதியில் உயர்த்த கேகேபி கூட்டுறவு நிறுவனம் ஐந்தாண்டு திட்டத்தை கொண்டுள்ளது.

அந்நிறுவனத்தின் தலைவர் தங்கராஜ் இதனை கூறினார்.

கேகேபி எனப்படும் மலேசிய தொழிலாளர் கூட்டுறவு நாணய நிறுவனம் கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக வெற்றியுடன் செயல்பட்டு வருகிறது.

அதே வேளையில் ஒவ்வொரு ஆண்டு மே தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இம்முறை வழக்கறிஞர் பாண்டித்துரை இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.

மே தினம் தொழிலாளர்களை கொண்டாடும் தினமாகும். அதன் அடிப்படையில் இன்று தொழிலாளர்களுக்கு சிறப்பும் செய்யப்பட்டது.

கேகேபி கூட்டுறவு நிறுவனம் நாட்டின் முன்னணி கூட்டுறவுக் கழகங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

பொருளாதார ரீதியில் வலுவாக இருக்கும் இக்கூட்டுறவு நிறுவனம் உறுப்பினர்களின் நலத் திட்டத்திலும் முழு கவனம் செலுத்த வருகிறது.

அதன் அடிப்படையில் 5 ஆண்டு திட்டத்தை கொண்டு கூட்டுறவு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

உறுப்பினர்களை பொருளாதார ரீதியில் உயர்த்துவது தான் இத்திட்டத்தின் நோக்கம் என்று தங்கராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset