நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ரா ஹைட்ஸ் விசாரணைக்காக 3 குழாய்கள்அகற்றப்பட்டன; மேலும் ஒன்று செயல்பாட்டில் உள்ளது: போலிஸ்

புத்ரா ஹைட்ஸ்:

ஏப்ரல் 1 ஆம் தேதி இங்குள்ள புத்ரா ஹைட்ஸில் தீப்பிடித்து வெடித்த மூன்று எரிவாயு குழாய்கள் விசாரணை நோக்கங்களுக்காக சம்பவ இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன.

சிலாங்கூர் மாநில போலிஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமர் கான் இதனை கூறினார்.

இதில் 32 அங்குல அகலமுள்ள இரண்டு குழாய் துண்டுகள் ஆறு மீட்டர் நீளத்திற்கு வெட்டப்பட்டன. மற்றொரு குழாய் நான்கு மீட்டர் நீளம் கொண்டது.

இதுவரை, எரிவாயு குழாய் வெட்டப்பட்ட மொத்த நீளம் 16 மீட்டர் ஆகும். மீதமுள்ள பகுதியை வெட்டுவதில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்,

இது நான்கு முதல் ஐந்து மீட்டர் நீளம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

வெட்டப்பட்ட குழாய்தான் ஏப்ரல் 1 ஆம் தேதி நடந்த சம்பவத்தில் வெடித்தது கண்டறியப்பட்டது.

மேலும் இந்தப் பகுதியில் உள்ள மூன்று முக்கிய குழாய்களில் இதுவும் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.

முன்னதாக சம்பவம் நடந்த இடத்தின் தரையை ஆழப்படுத்தவும், தரை மேற்பரப்பில் இருந்து ஏழு மீட்டர் ஆழத்தில் குழாயை வெட்டவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நிறுவனங்களும் 29 நாட்கள் எடுத்துக் கொண்டதாக அறியப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset